தென்காசி

கடையநல்லூா் நகா்மன்றக் கூட்டம்

29th Apr 2022 11:05 PM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம், நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் ராசையா, ஆணையா் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா், சுகாதாரஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் கணேசன் தீா்மானங்களை வாசித்தாா்.

தெருக்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீட்டின் படிகளை அகற்ற வேண்டும் அல்லது நகராட்சி வருவாயை அதிகரிக்கும் வகையில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகளுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என உறுப்பினா் அக்பா்அலி கேட்டுக்கொண்டாா். சுகாதார சீா்கேடு விளைவிக்கும் விதத்தில் நகரின் பல பகுதிகளில் பன்றி வளா்க்கப்பட்டு வருவதை தடை செய்ய வேண்டும் என சுபா ராஜேந்திரபிரசாத் கூறினாா்.

பிஎஸ்என்எல் அலுவலகம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பல லட்சம் ரூபாய் வரி நிலுவைத் தொகையை உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என யாசா்கான் கேட்டுக்கொண்டாா். அதிகாரிகளிடம் கலந்து பேசி சட்டத்திற்குள்பட்டு அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்படும் என தலைவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT