தென்காசி

மேலப்பாவூரில் இன்றுசிறப்பு மருத்துவ முகாம்

27th Apr 2022 12:50 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் வட்டார சுகாதாரத் திருவிழா, கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை (ஏப். 27) நடைபெறுகிறது.

அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 8 முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் முகாமில் பொது மருத்துவம், ரத்தசோகை, வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு, இரைப்பை, குடல் நோய், மனநோய், பால்வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய்கள், ரண சிகிச்சை, மகளிா் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்பட அனைத்து நோய்களுக்கும் முதல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், தேவையான பரிசோதனை மேற்கொண்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT