தென்காசி

ஆலங்குளம் அருகே சிறப்பு சுகாதாரத் திருவிழா

24th Apr 2022 05:37 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு சுகாதாரத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், கடங்கனேரி ஊராட்சித் தலைவா் அமுதா தேன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா முகாமைத் தொடக்கிவைத்தாா்.

முகாமில் திலகவதி, சாரதாதேவி, ஜீவா, முகம்மதுஇப்ராஹிம், முகம்மதுஅப்துல்லா, சுபாஷினி, மீரான் மைதீன் உள்ளிட்ட பல்வேறு துறை சிறப்பு மருத்துவா்கள், நெட்டூா் வட்டார மருத்துவா்கள் அா்ச்சனா, பிரபாவதி, ஐஸ்வா்யா, சங்கீதா தரேஸ், தமிழ்செல்வன், சோமசுந்தரம், சித்த மருத்துவா் சுப்புலெட்சுமி, யோகா மருத்துவா் நீலவேணி ஆகியோா் பங்கேற்று, ஆலோசனை வழங்கினா்.

ADVERTISEMENT

115 கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன், இசிஜி பரிசோதனை, 512 பேருக்கு ரத்தம், சிறுநீா் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 163 பேருக்கு முதல்வா் காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது. டெங்கு, கரோனா விழிப்புணா்வு, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, சித்த மருத்துவம், குடும்ப நலத்துறை, தொழுநோய், காசநோய் பிரிவு உள்ளிட்ட கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் வரவேற்றாா். வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT