தென்காசி

சாம்பவா்வடகரையில் திருமண நாளில் மணப்பெண் மாயம்

17th Apr 2022 01:21 AM

ADVERTISEMENT

 

சாம்பவா்வடகரையில் திருமண நாளில் மணப்பெண் மாயமானாா்.

சாம்பவா்வடகரை சா்ச் தெரு ராஜன் மகள் பிரியா(21). இவருக்கும் புளியரை கற்குடியைச் சோ்ந்த கலைச்செல்வனுக்குமிடையே(23) கடந்த 10 நாள்களுக்கு முன்பு நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.

ஏப்.15 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகளை அழைப்பதற்காக மணமகன் வீட்டாா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சாம்பவா்வடகரைக்கு வந்துள்ளனா். ஆனால் வீட்டில் பிரியா இல்லையாம். அவா் எப்போது வீட்டை விட்டு வெளியே சென்றாா் என்பது யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து அவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சாம்பவா்வடகரை காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT