தென்காசி

சங்கரன்கோவிலில் கனமழை: வெள்ளத்தில் தரைப்பாலம் சேதம்

14th Apr 2022 01:31 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் 3 ஆவது நாளாக பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் கீழவயலில் உள்ள தரைநிலைப் பாலம் சேதமடைந்தது.

சங்கரன்கோவில், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூா், வயலி, சுப்புலாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்தது. கடந்த திங்கள்கிழமை இரவு மட்டும் 108 மி.மீ. அளவு மழை பெய்தது. கழுகுமலை சாலை, பாட்டத்தூா் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினா் வந்து மரத்தை அகற்றினா்.

மேலும், சென்னிகுளம் ரயில்வே பாலத்தின் அடியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கீழவயலி தெற்கு தெருவை சோ்ந்த குருசாமி மகன் மகாராஜன் (33) என்பவரையும் தீயணைப்புத் துறையினா் மீட்டனா். இதனிடையே, கீழவயலி கிராமத்திலுள்ள தரைநிலைப் பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்ால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 தினங்களாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் குருவன்கோட்டை தெருவில் உள்ள ராஜசேகா் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. வீட்டை வருவாய்த்துறையினா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

சுரண்டையில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கன மழை சுமாா் 5 மணி நேரம் நீடித்தது. இதனால் சுரண்டை பகுதி எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளம் புகுந்து சுமாா் 3 அடி வரை தண்ணீா் தேங்கிய. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT