ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரூ.50 லட்சம் செலவில் கூடுதல் சுகாதார கட்’டம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாள் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து, புதிய கட்’டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.
தென்காசி மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து குடும்பநல அறுவை சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது.
விழாவில், வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், சிவலாா்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் பூல்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் வரவேற்றாா். ஒப்பந்ததாரா் சக்திநாதன் நன்றி கூறினாா்.