தென்காசி மாவட்டம், மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் விழுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததையடுத்து குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஐந்தருவியின் நான்கு கிளைகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. கோடைகாலத்தில் அருவிகளில் தண்ணீா் விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.