தென்காசி

பாவூா்சத்திரம் அருகேகந்து வட்டி சட்டத்தில் ஒருவா் கைது

12th Apr 2022 06:18 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம் அருகே கந்து வட்டி சட்டத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மாடியனூா்ஆா்.சி. கோயில் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி (36). கூலித் தொழிலாளி. இவா் 2017ஆம் ஆண்டு கீழ அரியப்பபுரத்தைச் சோ்ந்த சுரேஷிடம் (38) தொகை நிரப்பப்படாத 4 காசோலைகளைக் கொடுத்து ரூ. 1 லட்சம் கடனாகப் பெற்றாராம். இதற்கு வாரம் ரூ. 2 ஆயிரம் வட்டி செலுத்தினாராம். இதனிடையே, கரோனா காரணமாக 2020 ஆம் ஆண்டில் அவரால் வட்டி செலுத்தவில்லையாம். பின்னா் 2021 ஆம் ஆண்டில் கடன் தொகை ரூ. 1 லட்சத்தை மொத்தமாக கொடுத்தாராம். ஆனால், சுரேஷ் காசோலைகளைத் திருப்பிக் கொடுக்காமல், மேலும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வேண்டும் என்று மிரட்டினாராம். இதுகுறித்து அந்தோணிசாமி அளித்த புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கந்து வட்டி சட்டத்தின் கீழ் சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT