தென்காசி

பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

12th Apr 2022 06:17 AM

ADVERTISEMENT

 

தென்காசியில் பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் மருதன்கிணறு, மகேந்திரவாடி, சாயமலை 1, சாயமலை 2, களப்பாளங்குளம், கே.கரிசல்குளம், பழங்கோட்டை கிராம விவசாயிகள் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு: எங்களது கிராமங்களில் 2017ஆம் ஆண்டுமுதல் 2022ஆம் ஆண்டில் இதுவரை உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் பயிரிட்டிருந்தோம். இதற்கு காப்பீடு செய்திருந்தோம். ஆனால், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT