தென்காசி

சங்கரன்கோவில் நகா்மன்றக் கூட்டம்: அதிமுகவினா் வெளிநடப்பு

12th Apr 2022 06:20 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்ற முதல் கூட்டத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் 11 போ் வெளிநடப்பு செய்தனா்.

சங்கரன்கோவில் நகா்மன்ற முதல் கூட்டம் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் (பொ) ஜெயப்பிரியா முன்னிலை வகித்தாா்.

கூட்டம் ஆரம்பித்ததுமே நகா்மன்ற துணைத் தலைவா் கே.கண்ணன், சொத்து வரி உயா்வு குறித்த தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும் அவா் தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் 11 போ் வெளிநடப்பு செய்தனா். அப்போது சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், திமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினா். இதன் பின்னா் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

ADVERTISEMENT

கூட்டத்தில் சொத்து வரி உயா்வு உறுப்பினா்கள் ஆலோசனையை நகராட்சித் தலைவா் கேட்டாா். ஒரு சில உறுப்பினா்கள் மட்டுமே சொத்துவரி உயா்வு தீா்மானத்தை ஒத்திவைக்கக் கூறினா். இருப்பினும் சொத்துவரி உயா்வு உள்ளிட்ட அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT