தென்காசி

கல்குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆலங்குளத்தில் கிராம மக்கள் போராட்டம்

12th Apr 2022 06:19 AM

ADVERTISEMENT

 

கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, புதுப்பட்டி கிராம மக்கள் ஆலங்குளத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆலங்குளம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் 15 கல்குவாரிகள் உள்ளன. இந்நிலையில், ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டியில் புதிதாக கல்குவாரி அமைக்க ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அனுமதி அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், கல்குவாரிக்கு அனுமதி கூடாது என ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்திருந்தனா். இதனிடையே, புதிய கல் குவாரி அமைக்க 2 நாள்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டதாம். இதைக் கண்டித்து, ஆலங்குளம் காமராஜா் சிலை அருகே மாணவா்-மாணவிகள், ஏராளமான பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து, ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு, வட்டாட்சியா் பரிமளா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT