தென்காசி

‘கிணற்றிலுள்ள கற்களை அகற்ற அனுமதி தேவை’

5th Apr 2022 12:56 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் கிணறுகளிலுள்ள கற்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் மாடசாமி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து கிணறுகளிலும் கற்கள் அள்ளாமல் இருப்பதால் பொதுமக்களும், குழந்தைகளும் பாம்பு, பூச்சி போன்றவற்றால் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனா். இது தொடா்பான ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் கொடுத்தும் தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, கனிமவளத் துறை அதிகாரிகளிடம் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

எனவே கற்களை அகற்ற அனுமதி வழங்க வட்டாட்சியா்களுக்கும், கிராம நிா்வாக அதிகாரிகளுக்கும் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT