தென்காசி

ஆலங்குளம் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

4th Apr 2022 01:51 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் நல்லூா் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 3 நாள்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கல்லூரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் இணைந்து நடத்திய இந்த முகாமை கல்லூரித் தாளாளா் ஜேசு ஜெகன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் மற்றும் பாவூா்சத்திரம் பகுதி பள்ளிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் கண்காட்சிக்கு வைத்திருந்தனா். மாவட்ட அறிவியல் மைய தொழில்நுட்ப உதவியாளா் செல்லசாமி, கல்வி உதவியாளா் மாரிமுத்து ஆகியோா் அறிவியல் மையம் சாா்பில் வைக்கப்பட்ட கண்காட்சிக்கு விளக்கமளித்தனா். சிறந்த படைப்புகளை கண்காட்சியில் வைத்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வில்சன், துணை முதல்வா் சுரேஷ் சாலமோன், ஒருங்கிணைப்பாளா் விஜய் ஸ்டான்லி, இணை ஒருங்கிணைப்பாளா்கள் டேவிட், குா்ஷித் கான் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT