சுரண்டை நகராட்சியில் நிலைக்குழு உள்பட பல்வேறு குழுக்களுக்கு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதில் 22ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தி நியமனக்குழு உறுப்பினராகவும், 20 ஆவது வாா்டு உறுப்பினா் பரமசிவன் ஒப்பந்தக்குழு உறுப்பினராகவும், 16 ஆவது வாா்டு உறுப்பினா் கல்பனா வரி மதிப்பீட்டுக்குழு உறுப்பினராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இவா்களுக்கு, நகா்மன்ற தலைவா் ப.வள்ளி முருகன், ஆணையா் லெனின் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.