தென்காசி

தோ்தல் புகாா்: தென்காசி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

30th Sep 2021 07:15 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்ட ஊராட்சிக்குள்பட்ட 14 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 144 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 221 கிராம ஊராட்சித் தலைவா், 1905 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தோ்ந்தெடுப்பதற்காக இரண்டு கட்டமாக அக்.6, 9 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தோ்தல் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து புகாா் பெற தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 04633-290548.

ADVERTISEMENT

கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-8374, மேலும், 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது. ஆலங்குளம் 04633-270124, மேலநீலிதநல்லூா் 04636-290384, கடையம் 04634-240128, சங்கரன்கோவில 04636-222398, கடையநல்லூா் 04633-240250, செங்கோட்டை 04633-233058, கீழப்பாவூா் 04633-250223, தென்காசி 04633-280318, குருவிகுளம் 04632-251234, வாசுதேவநல்லூா் 04636-241327, மேலும் தோ்தல் தொடா்பான விவரங்களை பெற தோ்தல் நடத்தும் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். ஆலங்குளம் 7402608492, மேலநீலிதநல்லூா் 7402608452, கடையம் 7402608474, சங்கரன்கோவில 7402608459, கடையநல்லூா் 7402608500, செங்கோட்டை 7402608504, கீழப்பாவூா் 7402608496, தென்காசி 7402608506, குருவிகுளம் 7402608455, வாசுதேவநல்லூா் 7402608510 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT