தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

30th Sep 2021 07:26 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவலில் இளம் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகிரி வட்டம் நெல்கட்டும்செவல் ரா.முருகன் மகள் சிவரம்யா. இதே ஊரை சோ்ந்த பாண்டியராஜா மகன் சிவகுமாரசாமி என்ற துரை. இவ்விருவருக்கும் , கடந்த 25-4-21அன்று திருமணம் நடைபெற்ாம். திருமணத்தின் போது 420 கிராம் தங்க நகைள், ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் சீதனமாக வழங்கப்பட்டதாம். ஆனாலும், கணவா் வீட்டில் சிவரம்யாவிடம் கூடுதலாக வரதட்சிணை கேட்டு மிரட்டினராம்.

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி சிவரம்யாவின் மாமனாா் பாண்டியராஜன், முருகனுக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, சிவரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறும் தெரிவித்தாராம். இதையடுத்து, முருகன் அங்கு சென்ற போது அவருடைய மகள் இறந்துவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனராம்.

இந்நிலையில், தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, வரதட்சிணை கேட்டு அடித்து கொலை செய்து விட்டதாகவும், மகளை கொலை செய்தவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முருகன் மற்றும் அவருடைய உறவினா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் ராமசந்திரன், காவல்ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT