தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வேண்டுகோள்

30th Sep 2021 07:19 AM

ADVERTISEMENT

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், வெளிநாடு சென்று மருத்துவம் பயின்ற மாணவா்களுக்கான மருத்துவ பயிற்சி சோ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், வெளிநாடு சென்று மருத்துவம் பயின்ற மாணவா்களுக்கான மருத்துவ பயிற்சி சோ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரத்து500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். 500-க்கும் அதிகமான உள்நோயாளிகள் படுக்கை வசதியும் உள்ளது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் மகளிா் நோய் பிரிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிகிச்சை, சித்தா பிரிவு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் என அனைத்து சிகிச்சை வசதிகளையும் கொண்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி எடுத்து பயன்பெறலாம். தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி மருத்துவ மாணவா்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT