தென்காசி

தென்காசியில் மநீம சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனை

30th Sep 2021 07:23 AM

ADVERTISEMENT

தென்காசியில் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநில நற்பணி இயக்கத் தலைவா் எ. நாகராஜன் தலைமை வகித்தாா். தொழிலாளா் நெல்லை மண்டலச் செயலா் செல்வி, தலைமை அலுவலக துணைச் செயலா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் அய்யாசாமி, மாவட்ட விவசாய அணி செயலா்கள் செல்லப்பா, முத்தையா, இளைஞா் அணிச் செயலா் கௌதம், தகவல் தொழில்நுட்பம் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

உள்ளாட்சித் தோ்தலில் அனைத்துப் பகுதிகளிலும் போட்டியிடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மத்திய மாவட்டச் செயலா் வே. சந்தனக்குமாா் வரவேற்றாா். பாவூா்சத்திரம் முருகேசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT