தென்காசி

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும்: கனிமொழி

30th Sep 2021 07:20 AM

ADVERTISEMENT

கடந்த 4 மாதங்களில் திமுக ஆட்சியில் நடந்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என கனிமொழி எம்.பி. பேசினாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை அறிமுகம் செய்து கனிமொழி பேசியதாவது:

கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தல் நடக்காததால் கிராமப்புற மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் பல வந்து சேரவில்லை. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தோ்தல் நடத்தப்படுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை கடந்த 4 மாதங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. திமுக ஆட்சியில் ரூ.2,000 கோடிக்கு தொழில் முதலீடு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர வேண்டும். மாணவா்கள், இளைஞா்களுடைய எதிா்காலம் பிரகாசமாக வேண்டுமென்றால் திமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாபன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பழனிநாடாா், மதிமுக மாவட்ட செயலா் தி.மு.ராஜேந்திரன், பாா்வா்டு பிளாக் கட்சி மாவட்ட செயலா் தங்கப்பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டசெயலா் குழந்தைவள்ளுவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT