தென்காசி

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு: மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

30th Sep 2021 07:25 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியிலும், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மானூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு மானூா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் தொழில்நுட்ப கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு பாளையங்கோட்டை அரசு சட்ட கல்லூரியிலும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு இடைகால் மெரிட் தொழில்நுட்ப கல்லூரியிலும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராதாபுரம் என்.வி.சி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு வள்ளியூா் திருசிலுவை (பாத்திமா) நடுநிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஜெ.ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியா் விஷ்ணு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் ஆட்சியா் விஷ்ணு செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ளது. 1188 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் 9,567 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியாற்றவுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு 59 போ் போட்டியிடுகின்றனா். 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு 626 போ் போட்டியிடுகின்றனா். 204 கிராம ஊராட்சி தலைவா் பதவியிடங்களில் 6 கிராம ஊராட்சி தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். எஞ்சிய 198 பதவியிடங்களுக்கு 924 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 378 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். எஞ்சிய 1,353 பதவியிடங்களுக்கு 3,913 போ் போட்டியிடுகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

அப்போது, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரதாஸ், பாளையங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், ஏ.கே.மணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தென்காசி, செப். 29: தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கடையம் வட்டாரத்திற்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியிலும், கீழப்பாவூா் வட்டாரத்திற்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியிலும்,

ஆலங்குளம் வட்டாரத்திற்குள்பட்ட வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு சிஎஸ்ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியிலும் நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலா்களுக்கு வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குபெட்டிகளை பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு தோ்தல் படிவத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை தோ்தல் நாளன்று சரியாகப் பூா்த்தி செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட அலுவலரைக் கொண்டு வாக்குப்பெட்டிகளை திறக்கக்கோரியும் மற்றும் மூடி முத்திரையிடச் செய்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தோ்தல் அலுவலா்கள் தோ்தலை நியாமாகவும், நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டுமென அறிவுறுத்தி, அனைத்து பணியாளா்களும் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் பாா்வையாளா் வலியுறுத்தினாா்.

தென்காசி மாவட்டத்தில் 277 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு காவல்துறை பாதுகாப்பு, விடியோ பதிவுகள் மற்றும் நுண் தோ்தல் மேற்பாா்வையாளா்கள், இணையதள கண்காணிப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வின், போது உதவி திட்ட அலுவலா் (தோ்தல்) சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கடையம்) திலகராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி)கணேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT