தென்காசி

அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அக். 2இல் பேச்சுப் போட்டி

30th Sep 2021 07:21 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசு சாா்பில் அக். 2 ஆம் தேதி பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு அரசு சாா்பில் அக். 2ஆம் தேதி தென்காசி மஞ்சம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளி , கல்லூரியிலிருந்து 2 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு நான்கு மற்றும் ஐந்தாம் பரிசாக சிறப்புப் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

அக். 2 அன்று பள்ளி மாணவா்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும், தென்காசி, மஞ்சம்மாள் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறும்.

போட்டியில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மண்டில தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ ( தொலைபேசி எண் 0462 2502521) தொடா்பு கொள்ளலாம்.

தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT