தென்காசி

நாகல்குளத்தில் பேரிடா் மீட்பு செயல்விளக்கம்

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள நாகல்குளத்தில் தீயணைப்புத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு செயல்விளக்கம் நடைபெற்றது.

ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் வடகிழக்கு பருவமழையையொட்டி பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடா் மீட்பு குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது.

நீா்நிலைகளில் தவறி விழுபவா்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தனா். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், நிலைய அலுவலா் சுடலைவேல், ஏட்டு சிவக்குமாா், வீரா்கள் திருமலைக்குமாா், தனசிங், காா்த்திக், ரமேஷ், சிவமணிராஜன், கீழப்பாவூா் வருவாய் ஆய்வாளா் ஆறுமுகச்சாமி, பெத்தநாடாா்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT