தென்காசி

காடுவெட்டி ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு

30th Oct 2021 04:53 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஒன்றியம் காடுவெட்டி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட முத்துலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஒன்றியச் செயலா்

செல்லதுரை, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி சுபாஷ் சந்திர போஸ், கிளைச் செயலா் ஜேக்கப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துலட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலா்கள் முத்துமாரி, சுபாஷ் சந்திரபோஸ், வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

விவசாய அணி துணை அமைப்பாளா் போஸ் என்ற மனோகரன் வரவேற்றாா். ஊராட்சித் துணைத்தலைவா் மனோஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT