தென்காசி

அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

30th Oct 2021 04:52 AM

ADVERTISEMENT

இந்திய செஞ்சிலுவைச் சங்க தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவா் ராஜேஷிடம், கோட்டாட்சியா் ராமசந்திரன் வழங்கினாா். இதேபோல், சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் மனோகரன், கடையநல்லூா், புளியங்குடி, சிவகிரி அரசு மருத்துவமனைகளுக்கும், கணேசன் ஆய்க்குடி, வீரகேரளம்புதூா் அரசு மருத்துவமனைகளுக்கும், ஹரிகரசுப்பிரமணியன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கும், ரவிச்சந்திரன் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கும், ஸ்டாலின் ஜவகா் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினா். சங்க பொருளாளா் கருப்பையா, மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் ஹரிகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT