தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ முகாம்

24th Oct 2021 03:04 AM

ADVERTISEMENT

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நெல்லை கேன்சா் கோ் சென்டா், குற்றாலம் மற்றும் குற்றாலம் சக்தி ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, இணை இயக்குநா் (நலப்பணிகள்) வெங்கட்ரங்கன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கச் செயலா் காா்த்திக்குமாா், சக்தி ரோட்டரி சங்கத் தலைவா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா தொடங்கி வைத்தாா். நோயிலிருந்து குணமடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நெல்லை கேன்சா் சென்டா் உதவும் கரங்கள் முருகன், ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறிதல் அவசியம் குறித்து பேசினாா். 15 வயதுக்குமேற்பட்ட பெண்களுக்கு மாா்பகம் தொடா்பான பிரச்னை உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஸ்கேன், மாமோகிராம், நோய் அறிகுறி குறித்து ஆலோசனை, சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 128 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

குழந்தைகள் நல மருத்துவா் கீதா வரவேற்றாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT