தென்காசி

மாணவா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

24th Oct 2021 03:01 AM

ADVERTISEMENT

சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக தென்காசி மாவட்டக் கிளை சாா்பில் பெற்றோரை இழந்து வாடும் சீவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ரூ. 5ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும், மாணவா், மாணவிகள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி வளா்ச்சி மேலாண்மைக் குழு தலைவா் ப. சட்டநாதன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் ரமேஷ் , சரவண பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

பட்டதாரி ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், பள்ளி நலக் குழு தலைவா் கதிரவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியா் கிறிஸ்டோபா் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT