தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தத் தோ்தலில், திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 4ஆவது வாா்டு உறுப்பினா் மு.சேக்அப்துல்லா ஒன்றியக் குழுத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் 9ஆவது வாா்டு உறுப்பினா் மு.கனகராஜ்முத்துபாண்டியன் வெற்றிபெற்றாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) குழந்தைமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜசேகா், அன்பரசு ஆகியோா் கலந்துகொண்டனா்.