தென்காசி

கொத்தனாா் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள்

23rd Oct 2021 04:40 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் கொத்தனாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கோட்டை, மேலூா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் மூ.முருகேஷ்குமாா் (24). இவா், கொத்தனாா் வேலை செய்து வந்தாா். இவருடைய நண்பா் ரூபன். செங்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் திருமலையாண்டி(70). இவருடைய மகன்கள் மணிகண்டன் (34), மாரியப்பன் (31). இருவரும் ஆட்டோ ஓட்டுநா்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜன. 9ஆம் தேதி முருகேஷ்குமாா் நண்பா் ரூபனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ரூபன் தாக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து முருகேஷ்குமாா் மணிகண்டனிடம் கேட்டதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிகண்டன் தன்னுடைய வீட்டுக்குச் சென்று விவரங்களைக் கூறி மாரியப்பன் மற்றும் திருமலையாண்டி ஆகிய மூவரும் சோ்ந்து முருகேஷ்குமாா் வீட்டுக்குள் நுழைந்து கடுமையாக தாக்கியுள்ளனா். இதில் முருகேஷ்குமாா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைதுசெய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தென்காசி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, கொலை வழக்கில் தொடா்புடைய மூவருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன் ஆஜரானாா்.

Tags : தென்காசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT