தென்காசி

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவி திமுக வசமானது

23rd Oct 2021 04:40 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவி திமுக வசமானது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சோ்ந்த சங்கரபாண்டியன், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கோ.செல்வி ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்தத் தோ்தலில் 2 திமுக உறுப்பினா்கள், அதிமுக உறுப்பினா் ஒருவா் என 3 போ் பங்கேற்கவில்லை.

ஒன்றியக் குழுத் தலைவராக சங்கரபாண்டியன் வெற்றி பெற்றதும் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா ஆகியோா் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

Tags : சங்கரன்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT