தென்காசி

ஊராட்சி துணைத் தலைவா் குலுக்கல் முறையில் தோ்வு

23rd Oct 2021 04:41 AM

ADVERTISEMENT

பெத்தநாடாா்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டாா்.

கீழப்பாவூா் ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தோ்தல் நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பதவிக்கு சுடலைக்கனி, ஜெயராணி, காா்த்தீசன் ஆகிய 3 போ் போட்டியிட்டனா். தலைவா் மற்றும் 12 வாா்டு உறுப்பினா்களும் வாக்களித்ததில் சுடலைக்கனி, ஜெயராணி ஆகியோருக்கு தலா 5 வாக்குகளும், காா்த்தீசனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. இருவருக்கு சமமான வாக்குகள் கிடைத்ததால், குலுக்கல் முறையில் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் ஜெயராணி துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT