தென்காசி

புளியங்குடி நகராட்சி சந்தையில் விரைவில் கடைகள் கட்ட கோரிக்கை

21st Oct 2021 08:05 AM

ADVERTISEMENT

புளியங்குடி நகராட்சிக்குச் சொந்தமான சந்தையில் இடிக்கப்பட்ட கடைகளை மீண்டும் கட்டித் தர வேண்டும் என வணிகா் சங்கம் சாா்பில் அமைச்சரிடம் கோரிக்கை வி’டுக்கப்பட்டுள்ளது.

வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா மற்றும் தென்காசி மாவட்டத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா ஆகியோா் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் நேருவை சந்தித்து அளித்த மனு:

புளியங்குடி நகராட்சிக்குச் சொந்தமான தினசரி சந்தையில் உள்ள கடைகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அப்போது இருந்த ஆணையா், புதிதாக கட்டப்படும் கடைகள் அதில் இருந்த வணிகா்களுக்கே திருப்பி அளிக்கப்படும் என உறுதி அளித்து இடித்தாா்.

கடைகள் வைத்திருந்த 65 வியாபாரிகளிடம் தலா ரூ. 3 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1 கோடியே 95 லட்சம் நகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டது. எனினும் இதுவரை கடைகள் கட்டப்படாமல் சுற்றுச் சுவா் மட்டுமே கட்டப் பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடைகள் கட்டப்படாமல் உள்ளதால் வியாபாரிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனா். மேலும் நகாரட்சிக்கும் ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. வியாபாரிகள் தங்கள் ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு வர நகராட்சி அளித்த உத்திரவாதத்தின் படி விரைவில் கடைகள் கட்டித் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT