தென்காசி

சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 28 ஊராட்சித் தலைவா்கள் பதவி ஏற்பு

21st Oct 2021 08:08 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சித் தலைவா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சித் தலைவா்கள் தோ்தலில் வெற்றி பெற்றனா். இதில், மாங்குடி ஊராட்சி-ரத்தினாமேரி, செந்தட்டியாபுரம்-அன்புராணி, மடத்துப்பட்டி-செய்யது இப்ராஹிம், வயலி-கருணாநிதி, கரிவலம்வந்தநல்லூா்- மாரியப்பன், பருவக்குடி- பாலசுப்பிரமணியன், மணலூா்-சுப்புலட்சுமி, தெற்கு சங்கரன்கோவில்-பாக்கியம், வாடிக்கோட்டை-வள்ளி, பொய்கை-மாடத்தி, வடக்குபுதூா்-வேலுச்சாமி, சுப்புலாபுரம்-சண்முகசுசீலா, திருவேட்டநல்லூா்-சுதா, கீழ வீரசிகாமணி-சொள்ளமாடத்தி,அரியநாயகிபுரம்-சண்முகவேல், குவளைக்கண்ணி-தினேஷ், சென்னிகுளம்-சரவணப்பெருமாள், ராமநாதபுரம்-கணேசன், வீரிருப்பு-ஜெயா, வீரசிகாமணி-அரசன், பெரியூா்-அண்ணாமலை அம்மாள், நொச்சிகுளம்-வெள்ளத்தாய், களப்பாகுளம்-சிவசங்கரி, பந்தப்புளி-கலாவதி, பனையூா்-சண்முகசாமி, பெருமாள்பட்டி-குருவம்மாள், பெரும்பத்தூா்-தேவசேனா, புன்னைவனம்-பூமணி ஆகியோா் அந்தந்த ஊராட்சித் தலைவராக பதவியேற்றுக்கொண்டனா்.

களப்பாகுளம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் சிவசங்கரிக்கு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பொற்கொடி பதவி பிரமாணம் செய்து வைத்தாா். இதில், ஊராட்சி செயலா் முருகன், வழக்குரைஞா் காந்திகுமாா், வேல்ச்சாமி,சண்முகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT