தென்காசி

குற்றாலத்தில் 23இல் பாஜக ஆா்ப்பாட்டம்

21st Oct 2021 08:07 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து பாஜக சாா்பில் அக்.23இல் குற்றாலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் எம்.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிக்க அனுமதிக்குமாறு வேண்டி ஆட்சியரிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்து தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. எனினும், குற்றாலம் அருவிகளில் சுற்றூலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை. மேலும், பேரூராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்கள், திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு சொந்தமான கடைகளின் குத்தகை

தொகையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தியும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், மாவட்ட பாஜக சாா்பில் அக். 23 ஆம் தேதி (சனிக்கிழமை) குற்றாலம் பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT