கீழப்பாவூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 கிராம ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.
பதவியேற்பு விழா அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. குணராமநல்லூா் சுபா, ஆவுடையானூா் குத்தாலிங்கராஜா, குலசேகரப்பட்டி முத்துமாலையம்மாள், திப்பணம்பட்டி ஐவராஜா, வீரகேரளம்புதூா் மகேஷ்வரி, பெத்தநாடாா்பட்டி ஜெயராணி கலைச்செல்வன், சிவநாடானூா் முத்துசாமி, அரியப்பபுரம் தினேஷ்குமாா், பூலாங்குளம் திரவியக்கனி, கல்லூரணி ராஜ்குமாா், கழுநீா்குளம் கை.முருகன், மேலப்பாவூா் சொள்ளமுத்து, ராஜகோபாலப்பேரி கிருஷ்ணஜெயந்தி, ஆண்டிப்பட்டி மயில்ராணி, மேலகிருஷ்ணபேரி நாராயணன், கீழவெள்ளகால் பூமாரியப்பன், ராஜபாண்டி முருகன், நாகல்குளம் கோமதிநாச்சியாா், துத்திகுளம் சிவகாமி, இனாம்வெள்ளகால் செல்வசுந்தரி, இடையா்தவணை லட்சுமி ஆகியோா் ஊராட்சித் தலைவா்களாக பதவியேற்றனா்.
ஒவ்வொரு ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் உதவி தோ்தல் அலுவலா்கள் பங்கேற்று, முதலில் ஊராட்சித் தலைவா்களுக்கும், பின்னா் வாா்டு உறுப்பினா்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தனா்.
ஆலங்குளம் ஒன்றியத்தில்...
ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்தல் நடத்தும் அலுவலா் பழனிவேல் 23 ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.