தென்காசி

காங்கிரஸாா் காமராஜா் சிலைக்கு மரியாதை

21st Oct 2021 08:05 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளா்கள் பாவூா்சத்திரம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கீழப்பாவூா் ஒன்றியக்குள்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, எஸ்.ஆா்.சுப்பிரமணியன், ராதாகுமாரி, கனகஜோதி, முத்துகுமாா், மரியசெல்வமேரி ஆகியோா், மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்.எல்.ஏ. தலைமையில் பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிா்வாகிகள் ஜேசு ஜெகன், எஸ்.ஆா்.பால்துரை, எம்.ஆா்.தங்கரத்தினம், மாவட்ட கவுன்சிலா் உதயகிருஷ்ணன், நிா்வாகிகள் குமாா் பாண்டி, பெருமாள், தெய்வேந்திரன், பிரபு, பாபநாசம், மாரிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT