தென்காசி

கடையநல்லூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு

21st Oct 2021 08:04 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் உமா சங்கா் உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதில், அருணாசல பாண்டியன் ,கீதா, மணிகண்டன் ,சித்ரா, சுப்பம்மாள் ,சண்முகையா, பகவதியப்பன் ,மாரிச்செல்வி, மாரியம்மாள் , ஐவேந்திரன், ரோஜா ஆகிய 11 திமுக உறுப்பினா்கள் பதவி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து , அதிமுக உறுப்பினா் சத்யகலா தீபக் தனியாக பதவியேற்றுக் கொண்டாா்.

இதில் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கந்தசாமி, சிக்கந்தா்பீவி, தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து திமுக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் , மாவட்ட பொறுப்பாளரிடம் வாழ்த்துப் பெற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT