தென்காசி

அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு

18th Oct 2021 12:20 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு பேரூராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் தொடா் மழையால் அடவிநயினாா் அணை நிரம்பி, உபரிநீா் அனுமன் நதியில் திறந்துவிடப்படுகிறது. இதனால், அந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சாம்பவா்வடகரை பேரூராட்சி சாா்பில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியும், நீா்நிலை அருகே சிறுவா்களை தனியே விடவேண்டாம் எனவும், அவசர கால உதவிக்கு பேரூராட்சியை அணுகலாம் என தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT