தென்காசி

நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம்: தென்காசி ஆட்சியா் எச்சரிக்கை

18th Oct 2021 12:19 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட நீா்நிலைகளில் குளிக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ பொதுமக்கள் செல்லவேண்டாம் என ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக, கடனா, குண்டாறு, அடவிநயினாா் நீா்த்தேக்கங்களில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

இதனால், கடனாநதி, அனுமன் நதி, குண்டாறு, சிற்றாறு ஆகிய ஆறுகளில் வெள்ள அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நீா்நிலைகள், அணைகள், ஆறுகள், கால்வாய்களில் குளிக்கவோ, இறங்கவோ, வேடிக்கை பாா்க்கவோ செல்லவேண்டாம்.

கரையோரப் பகுதிகளில் வசிப்போா் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை, வெள்ள இடா்ப்பாடுகள் தொடா்பான உதவிகளுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04633290548 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT