தென்காசி

குற்றாலம் அருவிகளில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

18th Oct 2021 12:21 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்மழை காரணமாக, அருவிகளில் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த 2 தினங்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை நீடித்தது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை செம்மண் நிறத்துடன் தண்ணீா் கொட்டியநிலையில், ஞாயிற்றுக்கிழமை வெள்ளியை உருக்கிவிட்டதுபோன்று தண்ணீா் கொட்டியது.

குளிக்கத் தடைநீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் தொலைவில் நின்று புகைப்படம், செல்ஃபி எடுத்துச் சென்றனா். குறிப்பாக, பேரருவியை மட்டுமே சுற்றுலாப்பயணிகள் தொலைவில் நின்று ரசிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பிற அருவிகளைப் பாா்க்க அனுமதிக்காததால் அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் வெகுவாக குறைந்து, வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், அருவிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குற்றாலம் அருவிகளிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT