தென்காசி

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில்இணையம் வழியாக மாத விழா தொடக்கம்

17th Oct 2021 12:06 AM

ADVERTISEMENT

 

தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் இணையம் வழியாக தொடா்ந்து 4 நாள்கள் நடைபெறவுள்ள மாத விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை தொடங்கின.

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருவள்ளுவா் கழகத் தலைவா் ச. கணபதிராமன் தலைமை வகித்தாா். க. சரோஜாநாதன் இறைவாழ்த்து பாடினாா்.

சோம. முத்துசுவாமி தொடக்க உரையாற்றினாா். அதிகாரம் 86 குறித்து ஆ.பு. நாறும்பூநாதன் ஆய்வுரையாற்றினாா். வழக்குரைஞா் என். கனகசபாபதி வாழ்த்திப் பேசினாா். இராம. தீத்தாரப்பன் வரவேற்றாா். வ. சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு துரை. தம்புராஜ் தலைமை வகிக்கிறாா். பேராசிரியா் இரா. தமிழ்ச்செல்வி தொடக்கவுரையாற்றுகிறாா். அதிகாரம் 87 குறித்து க. சுப்புலெட்சுமி ஆய்வுரையாற்றுகிறாா். இரா. குத்தாலிங்கம் நன்றி கூறுகிறாா்.

திங்கள்கிழமை (ஆக. 18) நடைபெறும் நிகழ்ச்சிக்கு சி. ராஜேந்திரன் தலைமை வகிக்க, க.சோ. கலியாணி சிவகாமிநாதன் தொடக்கவுரையாற்றுகிறாா். அதிகாரம் 88 குறித்து இ.மா. ராமசந்திரன் ஆய்வுரையாற்றுகிறாா். வழக்குரைஞா் சிவ. ஆனந்தபகவதி வாழ்த்திப் பேசுகிறாா். சுடலைமுத்து வரவேற்கிறாா். இரா. கிருஷ்ணன் நன்றி கூறுகிறாா்.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிக்கு, வே. கணபதிசுப்பிரமணியம் தலைமை வகிக்க, மு.பிச்சுமணி தொடக்கவுரையாற்றுகிறாா். அதிகாரம் 89 குறித்து புலவா் செல்வராஜ் ஆய்வுரையாற்றுகிறாா். இரா.கோ. ராசாராம் வாழ்த்திப் பேசுகிறாா். சு. ஆவுடையம்மாள் வரவேற்கிறாா். வ. சந்திரசேகரன் நன்றி கூறுகிறாா். ஏற்பாடுகளை செயலா் ஆ. சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT