தென்காசி

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் அமைப்பு தொடக்க விழா

17th Oct 2021 12:03 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சரியான உணவு சாப்பிடுவதற்கான அமைப்பின் (ஈட் ரைட் கிளப்) தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சோ. சுரேஷ் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியின் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முகம்மதுஹக்கீம், அமைப்பைத் தொடக்கிவைத்தாா். சரியான உணவுகளை முறையாக சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் உடல் நலம், கலப்பட உணவுப் பொருள்களைக் கண்டறியும் முறை குறித்துப் பேசினாா். ஒருங்கிணைப்பாளா் முனைவா் விஜிலா ஜாஸ்மின் பிளவா் வரவேற்றாா். மாணவா் மனோஜ்குமாா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT