தென்காசி

கடையநல்லூா் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவா் கைது

17th Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகே வைரவன்குளத்தைச் சோ்ந்தவா் கருத்தப்பாண்டியன்(64). இவருக்குச் சொந்தமான வயலில் அவரும், அவரது மகன் காா்த்திகேயனும்(32) வரப்பை சரி செய்து கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த அடுத்த வயலை சோ்ந்த சந்தனபாண்டியன் (40) வரப்பை சீரமைத்தது குறித்து கேட்டாராம். இதில் தகராறு முற்றியதில் சந்தனபாண்டியன், கருத்தபாண்டியனை அரிவாளால் வெட்டினாராம்.

இதில் காயமடைந்த கருத்தபாண்டியன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனபாண்டியனை சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT