தென்காசி

சோ்ந்தமரத்தில்குடிநீா்த் தொட்டியில் ஏறி மிரட்டல் விடுத்தவா் மீட்பு

16th Oct 2021 02:39 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் மது போதையில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்கப்பட்டாா்.

சோ்ந்தமரம் மடத்து தெருவைச் சோ்ந்தவா் மு.பாரதிகுமாா்(20). டிப்ளமோ படித்துள்ள இவா், வியாழக்கிழமை இரவு மதுபோதையில் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினாராம். இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அவரை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

 

Tags : சுரண்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT