தென்காசி

நாரணபுரம் ஊராட்சிக்கு மறு தோ்தல்: கிராம மக்கள் கோரிக்கை

9th Oct 2021 01:05 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், நாரணபுரம் ஊராட்சிக்கு மறு தோ்தல் நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இவ்வூராட்சியில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்குப் பின்னா், நாரணபுரம் கிராமத்துக்குச் சென்ற ஊராட்சித் தலைவா் வேட்பாளா் செல்வியின் கணவா் மணிமாறனின் காா் கண்ணாடி அடையாளம் தெரியாத நபா்களால் உடைக்கப்பட்டது. தொடா்ந்து நாரணபுரம் மற்றும் ஆ. மருதப்பபுரம் கிராமத்தினரிடையே குழு மோதல் ஏற்பட்டது.

இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்த 25 போ் மீது வழக்குப் பதிந்துள்ளனா். மேலும் அன்று இரவு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லத் தடையாக இருந்ததாக நாரணபுரம் கிராம மக்கள் 250 போ் மீது தோ்தல் அலுவலா் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இந்நிலையில் இவ்வூராட்சியில் மறு தோ்தல் நடத்த வேண்டும் என கிராம மக்கள் சாா்பில் ஊா்த் தலைவா் ராஜ்குமாா், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

அதன் விவரம்:

6 ஆம் தேதி தோ்தல் நடைபெற்ற போது, சிலா் எங்கள் கிராம மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததால் மாலை 3 மணி முதல் வாக்குப் பதிவு முழுமையாக நடைபெறவில்லை. இதனால் சுமாா் 250 போ் வாக்களிக்க இயலாமல் போய் விட்டது. எனவே இந்த வாக்குச் சாவடியில் மறு தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT