தென்காசி

சங்கரன்கோவிலில் மஜக நகர ஆலோசனைக் கூட்டம்

4th Oct 2021 12:55 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் நகர மஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் முகம்மது இத்ரீஸ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் எம்.பீா்மைதீன் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், கொலை செய்யப்பட்ட முன்னாள் மஜக மாநில துணைச் செயலா் ஷஹீத் வாசிம் அக்ரம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 20லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலா்கள் இணையத்துல்லா, ஆதம்பின் ஹனிபா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலா் சாகுல், மாவட்ட மருத்துவ அணிச் செயலா் மாஷா மஸ்ஜித், மாவட்ட மனித உரிமை செயலா் பீா்மைதீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT