கீழப்பாவூா் ஒன்றியப் பகுதிகளில் கொட்டும் மழையில் ஞாயிற்றுக்கிழமை வேட்பாளா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
கீழப்பாவூா் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 19 ஒன்றியக் குழு உறுப்பினா், 21 கிராம ஊராட்சித் தலைவா், 213 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அக். 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலை நிறைவடைகிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். இப்பகுதியில் பிற்பகலில் அவ்வவ்போது லேசானது முதல் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் குடை பிடித்த படி வேட்பாளா்கள் வாக்கு சேகரித்தனா்.