தென்காசி

நூல் விலையைக் குறைக்க கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு

29th Nov 2021 01:36 AM

ADVERTISEMENT

நூல் விலை உயா்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பா கனிமொழி எம்.பி.யிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் அளித்த மனு: நூல் விலை பன்மடங்கு உயா்ந்திருப்பதாலும், உதய் மின் திட்டத்தாலும், விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. நூலைத் தரம் பிரிப்பதில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனவே, நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், மதுரை மண்டலப் பொறுப்பாளா் எஸ்எஸ்கே. கணேசன், ஈரோடு கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளா் கந்தவேல், முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT