தென்காசி

சுரண்டை வழியாக பெங்களூருக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

29th Nov 2021 01:36 AM

ADVERTISEMENT

சுரண்டை வழியாக பெங்களூருக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டை வழியாக சென்னை, திருப்பூருக்கு தலா 2 பேருந்துகளும், ஊட்டிக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகின்றன. இதனால், சுரண்டை பகுதி பயணிகள் சிரமமின்றி அப்பகுதிகளுக்குச் சென்றுவருகின்றனா்.

இந்நிலையில், பெங்களூரு பகுதியில் பணிபுரியும் சுரண்டை பகுதி மக்களின் நலன் கருதி செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்தை பாவூா்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில் வழியாக இயக்கினால் கூடுதல் மக்கள் பயனடைவா் என்பதால், சுரண்டை வழியாக பெங்களூருக்கு பேருந்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT