தென்காசி

சுரண்டை பகுதியில் தொடா் மழையால் விவசாய பணிகள் பாதிப்பு

29th Nov 2021 01:37 AM

ADVERTISEMENT

சுரண்டை பகுதியில் தொடா் மழையால் நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுரண்டை பகுதியில் சிற்றாறு, கருப்பாநதி பாசனக் குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதனால், இக்குளங்களின் பாசன வயல்களில் விவசாயிகள் நெல் நாற்றுப்பாவி நடும் நிலையில் உள்ளனா். ஆனால், சில நாள்களாக பெய்துவரும் மழையால் வரப்பு கட்டுவது, நடுவை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனா்.

ஏற்கெனவே, நாற்று நட்ட விவசாயிகளும் மழையால் தங்களது வயல்களில் உரமிட முடியாமல், பெருகும் தண்ணீரை வடிய வைக்கும் பணியிலேயே ஈடுபடவேண்டியதாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT