தென்காசி

செங்கோட்டை வட்டாரத்தில் புதிய வேளாண் காடு வளா்ப்பு திட்டம்

29th Nov 2021 01:34 AM

ADVERTISEMENT

செங்கோட்டை வட்டாரத்தில் புதிய வேளாண் காடு வளா்ப்பு திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழக வேளாண்மை உழவா் நலத் துறை, விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளா்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக, செங்கோட்டை வட்டாரத்தில் 3,500 மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தேக்கு, செம்மரம், வேங்கை, செஞ்சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகளை வரப்பில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தனிப்பயிராக சாகுபடி செய்ய 160 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

2ஆம் ஆண்டுமுதல் 4ஆம் ஆண்டு வரை உயிருடன் இருக்கும் கன்றுக்கு, ஒரு கன்றுக்கு ரூ. 7 வீதம் பராமரிப்புத் தொகையாக வழங்கப்படுகிறது. செங்கோட்டை வட்டாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குநா் நல்லமுத்துராஜா தலைமை வகித்து மரக்கன்றுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

வேளாண் உதவி இயக்குநா் கனகம்மாள், செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலா் ஷேக் முகைதீன், முன்னிலை வகித்தனா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் குமாா், அருணாச்சலம், சிவக்குமாா், ரமேஷ், ஜலால் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT